பேரவையில் நடந்தது என்ன? ஆளுனரிடம் நேரில் விளக்கம் அளிக்கின்றார் முதல்வர்

ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (10:42 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டார். ஆனாலும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன



இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலமைச்சர் பழனிச்சாமி சந்தித்து, பேரவை நிகழ்வுகள் குறித்து அவரிடம் விளக்குவார் என்று அரசு வட்டார செய்திகள் கூறுகின்றன.

ஆளுனருக்கு முதல்வரின் விளக்கம் திருப்தி அளித்தால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்கும் என்றும், திருப்தி தரவில்லை எனில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஆளுனர் உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்