முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை அகற்றும் முடிவில் தீவிரமாக உள்ள தினகரன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஒருபுறமும் திமுகவும் ஆளுநர் சந்திப்பு, ஜனாதிபதியிடம் முறையீடு எனத் தொடங்கி தற்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. எனவே, வருகிற 20ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி நீதிமன்றம் ஆணையிடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைம்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.