தீபா அரசியலுக்கு வராமல் இருந்தால் அவருக்கும் நல்லது, அரசியலுக்கும் நல்லது. குருமூர்த்தி

ஞாயிறு, 25 ஜூன் 2017 (22:03 IST)
பிரபல எழுத்தாளர், அரசியல் விமர்சகர் சோ அவர்களின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ள எஸ்.குரூமூர்த்தி அவர்கள் எழும்பூரில் உள்ள ஃப்ரீமேசன் அரங்கில் உலக சகோதரத்துவ தின நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:



 


 அதிமுகவை பொறுத்தவரை, அக்கட்சி பலம் அடைய ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அவர்கள் இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த பலம் கிடைக்காவிட்டாலும், 4 ஆண்டுகள் ஆட்சியை தொடர்வதற்கான பலமாவது கிடைக்கும்.

அந்த அளவுக்கு சிந்தனையும், திறனும், எல்லோருக்கும் தலைமை தாங்கும் நபரும் அக்கட்சியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதிமுகவில் குழப்பம் தொடரும் என்றே நான் கருதுகிறேன்.

சொத்து மட்டும்தான் எங்களுக்கு தேவை என்று கூறி, அரசியலில் இருந்து தீபா விலகினால், அது அவர்களுக்கும் நல்லது, அரசியலுக்கும் நல்லது. அவர் தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறுவதை கேட்கும்போது கஷ்டமாக உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்கு சட்டப்படி அவர் வாரிசாக இருக்கலாம். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அவர் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு துக்ளக் ஆசிர்யர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்