அறிவுஜீவிகளின் ஆலோசனையே மோடி-கருணாநிதி சந்திப்பு - கொளுத்திப்போடும் சுவாமி

செவ்வாய், 7 நவம்பர் 2017 (11:31 IST)
பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


 

 
தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த மோடி, கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசியுள்ளார். இது, தமிழக அரசியல் கட்சிகளிடையே ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், 2ஜி வழக்கின் தீர்ப்பு வருகிற டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி “மயிலாப்பூரில் உள்ள அறிவு ஜீவுகளின் ஆலோசனைபடிதான் மோடி-கருணாநிதி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இது 2ஜி வழக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பு என்பதால் தாமதம் ஏற்படுவது சகஜம்தான். இந்த வழக்கில் ராசாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் உச்சநீதிமன்றதை நாடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்