எனவே, மத்திய அரசின் ஆதரவின்றி, சசிகலா தமிழக முதல் அமைச்சர் ஆக முடியாது என்று தெரிந்து கொண்ட சசிகலா குடும்பத்தினர், வேறு மாதிரி காய் நகர்த்தினர். அதாவது, மத்திய அரசின் சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் அந்த திட்டம். மத்திய அரசின் உதய் திட்டம் மற்றும் நீட் திட்டம் உட்பட சில திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்பட்டது.