இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், விஜய் உள்பட ஒருசில நடிகர்கள் முதலமைச்சர் கனவில் உள்ளனர். ஒருசிலர் நேரடியாகவும், ஒருசிலர் மறைமுகமாகவும் இதை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் கொடுக்கும் வேலையை பொறுப்பாக செய்பவர் என்றும், நல்ல எண்ணம் கொண்டவர் என்றும், அவர் முதலமைச்சராக வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நடிகர் சூர்யா, திரைப்பட விழா ஒன்றில் கூறியுள்ளார்.