ஜெ. மரணமடைந்த அன்று எனக்கு மாலை 6.30 மணிக்கு தகவல் சொன்னார்கள். நான் உடனே மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் கூறினார்கள். அதன்பின் இரவு 11.30 அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார்கள். ஆனால், மக்கள் நலத்துறைச் செயாலாலர் ராதாகிருஷ்ணன், என்னிடம் எல்லா நிலவரத்தையும் தெரிவித்ததாக கூறுகிறார். இப்படி கூறியதை அவர் வாபஸ் பெறாவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வேன்.