கிணற்றில் போட்ட கல் போல! - எடப்பாடியை விலாசிய மு.க.ஸ்டாலின்

சனி, 10 ஜூன் 2017 (12:41 IST)
அதிமுக அரசை விமர்சிக்க திமுகவிற்கு தகுதியில்லை என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக செயல் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.


 

 
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “அதிமுக ஆட்சியை பினாமி ஆட்சி என தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். நடந்து கொண்டிருப்பது அதிமுகவின் நிலையான ஆட்சி. மொத்தம் 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி நடந்து வருகிறது. முந்தைய ஆட்சி காலங்களில் மைனாரிட்டி ஆட்சியாக செயல்பட்டு வந்த திமுகவிற்கு அதிமுகவை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை” என காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் “தமிழக பிரச்சினைகள் எதிலும் கவனம் செலுத்தாமல், மத்திய அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் அரசை பினாமி அரசு என சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும். கிணற்றில் போட்ட கல் போல அசைவின்றி, கடுகளவு கூட பயனில்லாமல் இருக்கும் அதிமுக அரசை தமிழக மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்