கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி 18வது வார்டு கந்தசாமி பிள்ளை தெருவில் வசிக்கும் மக்கள், தன் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி 18-வது வார்டு கந்தசாமிபிள்ளை தெருவில் சுமார் 40 குடியிருப்புகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் கந்தசாமி பிள்ளை தெருவில் நகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.