ரஜினி கட்சியில் ஜெகத்ரட்சகனுக்கு முக்கிய பதவி?

புதன், 24 மே 2017 (16:46 IST)
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள புதிய கட்சியில், திமுகவில்  இருந்து தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் ஜெகத்ரட்சகனுக்கு முக்கிய பதவி அளிக்கப்படலாம் என செய்திகள் உலா வருகிறது.


 

 
ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி,  தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தனக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம்  கடந்த சில நாட்களாக தீவிரமாக விவாதித்து வருவதாக தெரிகிறது. இந்த ஆலோசனையில் திமுகவில்  இருந்த ஜெகத்ரட்சகனிடம் தவறாமல் இடம் பெறுகிறாராம். 
 
1996ம் ஆண்டு, திமுக - தமாகா கட்சிகளுக்கிடையே கூட்டணியை ரஜினி உண்டாகிய போது நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தையிலும் ஜெகத்ரட்சகன் இடம்பெற்றார். அந்த நட்பு தற்போதும் ரஜினியோடு தொடர்கிறதாம். எனவேதான், அவரை தன்னுடன் வைத்துக்கொள்ள ரஜினி விரும்புவதாக தெரிகிறது. 
 
தற்போது திமுகவில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும் ஜெகத்ரட்சகனும், ரஜினியின் கோரிக்கையை ஏற்பார் எனத் தெரிகிறது. அனேகமாக, ரஜினி தொடங்கும் புதிய கட்சிக்கு, ஜெகத் ரட்சகன் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்