தமிழக அரசியல் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியை தக்க வைப்பது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் நடப்பது பற்றியோ, மக்களை பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை. மு.க.ஸ்டானிலோ, பன்னீர்செல்வத்தினாலோ இந்த அரசை வீழ்த்த முடியாது. கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக இதை செய்து இருப்பார் என்றார்.