ஜெயலாலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளாரக தேர்ந்தெடுக்க சசிகலாவுக்கு அதிமுக பெண் தொண்டர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஒருபக்கம் தீபாவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், என்னை யாராலும் தடுக்க முடியாது என்று தீபா கூறியுள்ளார்.
அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு அதிமுக தொண்டர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு அடுத்து அவரது இடத்தில், தீபா தான் அமர வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தி.நகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். பால்கனியில் இருந்து தொண்டர்களிடம் பேசிய தீபா, என் அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவேன் தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர் செய்த தியாகங்களுக்கு ஈடு இணையே இல்லை. உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன், என்று கூறினார்.