எடப்பாடி பழனிச்சாமி திடீர் பதவி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (10:08 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்க்க தினகரன் அணியினர் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் அவர்களை டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



 
 
தைரியமிருந்தால்,கட்சிப்பதவியிலிருந்து முதலமைச்சரை நீக்குங்கள் என எம்.பி குமார் சவால் விடுத்திருந்த நிலையில் முதலமைச்சரின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.
 
பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த அதிரடி மேலும் தொடரும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்