சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! திமுக அதிரடியால் பட்ஜெட் பாதிக்குமா?

வியாழன், 16 மார்ச் 2017 (05:12 IST)
தமிழக சட்டமன்ற சபாநாயகர் மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதால் இன்று தமிழக சட்டமன்றத்தில் பிரச்சனையின்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


 


சட்டசபை கூட்டத்தின் பட்ஜெட் தொடரில் வேறு எந்த விவாதமும் அனுமதிக்கப்படாது என்பதுதான் இதுவரை சட்டமன்றத்தின் வரலாறு. ஆனால் சபாநாயகர் தலைமையில் நடக்கும் ஒரு சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது என்பது தமிழக சட்டமன்ற வரலாற்றில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடைபெறும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

திமுகவின் இந்த அதிரடி முடிவுக்கு ஓபிஎஸ் அணி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த தீர்மானத்தால் என்ன நடக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்கவில்லை என்பதற்குத்தான் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்