ஹஜ் யாத்திரையை தடை செய்ய வேண்டும்: உபி பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

சனி, 15 ஜூலை 2017 (06:47 IST)
பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதில் இருந்தே ஒருசில பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிறுபான்மை இனத்தவர்களை பயமுறுத்தி வருவதாக கூறப்படுகிறது



 
 
இந்த நிலையில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால், இஸ்லாமியர்களை ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பா.ஜ.க எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கும் நிலையில் பா.ஜ.க எம்எல்ஏ பிரிட்ஜ்புஷான் ராஜ்புட் என்பவர் நேற்று ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவில் பேசினார்.
 
அதில் 'அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால், உபி இஸ்லாமியர்களை ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது' என்று பேசியுள்ளார். அமர்நாத் தாக்குதலால் பதட்டமாக இருக்கும் சூழ்நிலையில் இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்