2010-11ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு 6.6 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட வினாவிற்கு பதிலளித்த சரத் பவார், கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 3.2 விழுக்காடு இருந்ததென்றும், இப்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களால் இந்த நிதியாண்டில் இந்த அளவிற்கு உற்பத்தி வளர்ச்சி பெருக உள்ளது என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் தேச உணவுப் பாதுகாப்புத் திட்டம், எண்ணெய் வித்துக்கள் ஒருங்கிணைப்புத் திட்டம், பருப்பு, பனை எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களாலும், வட கிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பசுமைப் புரட்சி, 60 ஆயிரம் பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி கிராமங்கள் திட்டத்தினாலும் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதென பவார் கூறியுள்ளார்.