செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவம், மேலும் அக்டோபர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். 29 மற்றும் 30ம் தேதிகளில் பரவலாக தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. ஆனால் செப்டம்பர் 6 ம்தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நீடித்தது.
இந்நிலையில் தென்மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திராவை மையமாக கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரையும், 13 முதல் 17ம் தேதி வரையும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழையும் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி அக்டோபர் 10, 27 ஆகிய தேதிகள் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும்.