தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு!

வெள்ளி, 10 மே 2013 (17:00 IST)
FILE
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என இயற்கை பகுப்பாய்வு மற்றும் மேகங்கள் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவாது,

மே மாதம் 10 ம்தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இராமநாதபுரத்தை மையமாக கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவின் ஓங்கோல், மச்சிலிப்பட்டிணம் உள்பட ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களிலும், ஒரிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே மாதம் 10 அல்லது 11 ம்தேதி முதல் 18 ம்தேதி வரை பலத்த மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி மே 13, 23 ஆகிய தேதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்