என்டோசல்பானுக்கு 8 வாரங்கள் தடை விதித்தது உச்சநீதிமன்றம்

வெள்ளி, 13 மே 2011 (14:56 IST)
நச்சு ரசாயனமான என்டோசல்பான் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் 8 வாரங்கள் தடை விதித்துள்ளது.

மனித உயர்தான் அனைத்தையும் விடவும் முக்கியம் என்று கருதுவதால் இந்த இடைக்கால தடை வித்தித்துள்ளதாக நீதிபதிகள் குழுவின் தலைமை நீதிபதி கபாடியா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் என்டோசல்பானை உற்பத்தி செய்ய வழங்கப்பட்ட உரிமங்களை முடக்குமாறு ஆதிகாரிகளுக்க்கு நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

மேலும் என்டோசல்பான் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் விளைவிக்கும் ஆபத்துகள் குறித்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மற்றும் வேளாண் ஆணையம் ஆகீயவற்றின் விவரமான ஆய்வுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேற்கூறிய இரு நிபுணத்துவம் வாய்ந்த ஆய்வுகளின் தொகுப்பு நீதிமன்றத்தில் சமர்மிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த பூச்சிக்கொல்லி ரசாயனம் தடை செய்யப்படவேண்டுமா, அல்லது ஏற்கனவே இருக்கும் என்டோசல்பானை கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தவேண்டுமா, அல்லது மாற்று வழிமுறைகள் உள்ளதா என்பதை அந்த நிபுணர் குழு அறிக்கை முடிவு செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்