நவம்பர் மாதம் 10ம் தேதி கணிப்பின்படி நவம்பர் மாதம் 13ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதியில் தொண்டியை மையமாக கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட தென் தமிழகத்தில் கன மழையும், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகோட்டை உள்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபி கடல் நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 13 முதல் 17 வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது. நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி நவம்பர் 13, 28 தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.