ஜுன் மாதம் 7 ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழ்நிலை உள்ளதால் ஜுன் 8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 31 ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஜுன் 1 முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என தெரிவித்திருந்ததுபோல் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜுன் 7 ஆம் தேதி வானிலை கணிப்பின்படி கேரளா, கர்நாடாக, ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடையும் சூழ்நிலை உள்ளது. இதனால் கேராள, கர்நாடகா, ஆந்திராவில் பெரும்பாலான மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதனால் ஜுன் 8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பெரும்பலான நாட்களில் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை இந்திய அளவில் பெரும்பலான மாநிலங்களில் சராசரியைவிட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு மற்றும் வடக்கு கேரளா, தெற்கு மற்றும் வடக்கு கர்நாடகா, ஆந்திரா உள்பட ஒரு சில மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகோட்டை, சிவங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சராசரியைவிட மிக கூடுதலாகவும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் சராசரியைவிட கூடுதலாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.