த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் பல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளது - மழைரா‌ஜ்

புதன், 12 செப்டம்பர் 2012 (20:18 IST)
த‌ற்போதைய வா‌னிலை க‌ணி‌ப்‌பி‌ன்படி 13ஆ‌ம் தே‌தி முத‌ல் வட த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் பல பகு‌திக‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளதாக மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு செ‌ய்து வரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் அனு‌ப்‌பியு‌ள்ள செ‌ய்‌தி‌‌க் கு‌றி‌ப்பு வருமாறு:

செப்டம்பர் 12ம் தேதி கணிப்பின்படி செப்டம்பர் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 12ம் தேதி வானிலை கணிப்பின்படி கடலூர், புது‌ச்சேரியை மையமாக‌க் கொண்டு தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிக பலத்த மழையும், காவிரி டெல்டா மாவட்டங்கள், சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுகோட்டை, தேனி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் செப்டம்பர் 13 முதல் 16ம் தேதி வரையும், 21ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் பெரும்பலான நாட்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் கர்நாடாகவிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்வாய்ப்புள்ளது. நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி செப்டம்பர் மாதம் 15 மற்றும் 28ம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்