உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நவீன தொழில்நுட்பம் அவசியம்: வேளாண் விஞ்ஞானி

வெள்ளி, 20 மே 2011 (15:25 IST)
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் அதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியாக வேண்டும் என்று நாட்டின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானி கூறியுள்ளார்.

டெல்லியில் ஆசிய - பசிபிக் பகுதிக்கான வேளாண் உயிரிதொழில்நுட்ப ஒன்றிணைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வேளாண் ஆய்வு மற்றும் கல்வித் துறையின் முன்னாள் செயலராக இருந்த ஆர்.கே.பரோடா, “நமது நாட்டின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 23.5 கோடி டன் அளவிற்கு உள்ளது. இதனை 28.5 டன்களாக 2020ஆம் ஆண்டிற்குள் உயர்த்த வேண்டும். அதற்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தியாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நமது நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 2 விழுக்காடாக உள்ளது, இதனை 4 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் பரோடா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்