ஆர்.கே.நகர் தேர்தல்: திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு!!

சனி, 25 நவம்பர் 2017 (14:15 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்துள்ளார். 
 
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி. ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷையே இந்த முறையும் வேட்பாளராக களம் இறக்குவது என முடிவு செய்யப்பட்டது.
 
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜனநாயகப்படி தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. மற்ற கட்சியினரிடம் எங்களுக்கு ஆதரவு கேட்போம் என தெரிவித்தார்.
 
தற்போது, திமுக வேட்பாளர் மருது கணேஷ்-க்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கடிதம் மற்றும் தொலைப்பேசியின் மூலம் ஆதரவு கேட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாவும், விசிக மட்டுமின்றி மதசார்பற்ற சக்திகள் இணைந்து தேர்தலில் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்