மதுக்கடைகளை மூடுவதால் பயனில்லை: வானதி சீனிவாசன்

வியாழன், 14 ஜூலை 2016 (08:48 IST)
தமிழகத்தில், மத வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லூரிகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதால் எவ்வித மாற்றமும் இருக்காது என்று பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


 

 
கோவை பெரியகடை வீதிசலீவன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாஜக கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-
 
முதலைமைச்சர் அறிவித்தபடி தமிழகத்தில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடைகளின் நேரமும் குறைக்கப்பட்டது. 
 
இதையடுத்து தற்போது நீதிமன்றத்தின் உத்தரவு படி மேலும் 1000 மதுக்கடைகள் மூடுவதற்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் மத வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லூரி என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதால் எவ்வித மாற்றமும் இருக்காது. மக்களுக்கு இடையூறாக இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும், என்று கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்