ஜோ பிடன் பதவியேற்பு.. துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி! – அமெரிக்காவில் அவசரநிலை!

திங்கள், 18 ஜனவரி 2021 (10:48 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் துப்பாக்கியுடன் ஆசாமி ஒருவர் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்ற நிலையில் அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் நடப்பு அதிபர் ட்ரம்ப் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாளை மறுநாள் அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காரில் வந்த நபர் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவிற்கு வந்துள்ளதாக போலியான அழைப்பிதழை காட்டியுள்ளார். அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்ததில் கனரக துப்பாக்கியும் 506 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜோ பிடன் பதவியேற்பு விழா அன்று அமெரிக்கா முழுவதும் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்