மின் கட்டண பாக்கி மட்டும் 23 கோடி ரூபாய் – வைத்திருப்பது யார் தெரியுமா?

வியாழன், 19 நவம்பர் 2020 (10:43 IST)
திருப்பூர் மாநகராட்சி மின் வாரியத்துக்கு 23 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி தனது சொந்தமான 300 இணைப்புகளுக்கான மின் கட்டண பாக்கிட்யாக ரூ 23. 67 கோடி பாக்கி வைத்துள்ளதாக மின்சார வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக். மாதத்துக்குப் பின், தற்போது வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிருப்தியை தெரிவித்துள்ள மின்சார வாரியம் தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சியும் இந்த அளவுக்கு மின்கட்டண பாக்கி வைத்திருக்கவில்லை.

மின் கட்டணத்துக்கு வந்த தொகையை, பிற பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதால், மின்வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படாமல் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்