மூக்கை நோண்டி பீட்சாவில் வைத்த ஊழியர்! கடுப்பான வாடிக்கையாளர்கள்! – டோமினோஸ் நிறுவனம் மன்னிப்பு!

Prasanth Karthick

வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:48 IST)
பிரபலமான டோமினோஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் மூக்கை நோண்டி கொண்டே பீட்சா மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



உலகம் முழுவதும் பீட்சா, பர்கர் உள்ளிட்ட மேற்கத்திய உணவு வகைகள் பிரபலமாக இருந்து வரும் நிலையில் பீட்சா ஹட், மெக்டொனால்ட்ஸ், டோமினோஸ் என பல பன்னாட்டு உணவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இதற்கான கடைகளை திறந்து விற்பனை செய்து வருகின்றனர். அப்படியாக பீட்சா உணவு வகைகளை தயாரிக்கும் டோமினோஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஜப்பானில் உள்ள டோமினோஸ் கிளை ஒன்றில் பணியாளர் ஒருவர் பீட்சாவிற்கான மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். கையில் க்ளவுஸ் போட்டிருந்தாலும் அதோடே மூக்கை நோண்டி விட்டு மீண்டும் பீட்சா மாவில் கையை வைத்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஊழியரின் இந்த சுத்தமற்ற செயல் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் டோமினோஸ் நிறுவனம் நடந்த இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான, உயர்ரக உணவுகளை வழங்குவதையே தாங்கள் நோக்கமாக கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்