ஒரு போஸ்டரின் விலை 17 லட்சம்: காரணம் அதில் இருக்கும் கையெழுத்து!??

புதன், 28 ஆகஸ்ட் 2019 (13:21 IST)
அமெரிக்காவில் புகழ்பெற்ற அனிமேசன் படத்தின் போஸ்டர் ஒன்று லட்சக்கணக்கில் ஏலத்தில் வாங்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

1995ல் வெளியாகி உலகமெல்லாம் வெற்றி வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் “டாய் ஸ்டோரி”. பிக்சார் நிறுவனம் தயாரித்த இந்த படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. இந்த பிக்ஸார் நிறுவனத்தின் தலைவர் வேறு யாருமல்ல! ஆப்பிள் ஸ்மார்ட்போன், லேபாடாப், ஐபாட் என உலகத்தையே தனது உள்ளங்கைக்குள் சுருக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான் அவர்.

ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய பிக்ஸார் நிறுவனத்தின் முதல் திரைப்படம்தான் இந்த டாய் ஸ்டோரி. அப்போது அந்த டாய் ஸ்டோரி பட போஸ்டர் ஒன்றில் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்டுள்ளார். பொதுவாக அலுவலக ஆவணங்கள் தாண்டி வேறெதிலும் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்து போடுவது அபூர்வம். கடந்த 2011ல் அவர் இறந்து போனார்.

இந்நிலையில் அந்த போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு ஏலத்திற்கு வந்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரிஜினல் கையெழுத்து போடப்பட்ட அந்த போஸ்டரை ஏலத்தில் எடுக்க பலரும் போட்டி போட்டார்கள். கடைசியாக அந்த போஸ்டர் 17.90 லட்சத்துக்கு ஏலத்தில் விலை போனது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்