இலங்கை நாடாளுமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்: ஐ.நா அழுத்தத்திற்கு பணிந்த சிறிசேனா

திங்கள், 5 நவம்பர் 2018 (08:11 IST)
இலங்கையின் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்ட ராஜபக்சே, வரும் 16ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும்போது தனது மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஐ.நா சபை கொடுத்த அழுத்தம் காரணமாக இலங்கை பாராளுமன்றம் கூடும் தேதி தற்போது திடீரென மாற்றப்பட்டது. அந்த வகையில் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா அரசாணை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா கொடுத்த அழுத்தத்திற்கு அடிபணிந்தே அதிபர் சிறிசேனா இந்த அரசாணையை வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனவே நவம்பர் 14ஆம் தேதியே ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்