கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம்..!

Mahendran

சனி, 6 ஏப்ரல் 2024 (16:19 IST)
இந்தியாவில் தற்போது தேர்தல் நேரம் என்பதால் கச்சத்தீவு குறித்த பேச்சு எழுகிறது என்றும் கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் தேர்தல் நடைபெறும் பரபரப்புக்கு இடையே திடீரென பாரதிய ஜனதா கட்சி கச்சத்தீவு விவகாரத்தை எடுத்துள்ளது என்றும் கச்சத்தீவு தாரை வாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக தான் காரணம் என குற்றம் சாட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது என்றும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் சீனா ஆக்கிரமித்ததை பற்றி பேசாமல் கச்சத்தீவை பற்றி பேசுவதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தியாவில் எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் கச்சத்தீவு குறைத்த குரல் வருவது வழக்கமான ஒன்றுதான், ஆனால் கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார் 
 
இந்திய மீனவர்கள் தான் அடிக்கடி இலங்கை கடல் பகுதிக்கு வந்து மீன்பிடிக்கிறார்கள் என்றும் இந்த ஆண்டு மட்டுமே 178 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்