இரண்டாம் முறையாக வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்! – தடைகளை தாண்டுவாரா எலான் மஸ்க்!

புதன், 3 பிப்ரவரி 2021 (17:05 IST)
மக்களை சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு அழைத்து செல்லும் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் மீண்டும் வெடித்து சிதறியது.

உலக பணக்காரர்களில் முதலிடம் வகித்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்களை விண்ணுக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு விண்கலம் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம் இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக பறந்த நிலையில் மீண்டும் தரையிறக்கும்போது வெடித்து சிதறியது.

ஆனால் அதனால் சோர்ந்துவிடாத ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய விண்கலத்தை மீண்டும் தற்போது சோதித்தது. ஏவப்பட்டு 6 நிமிடங்களே தாக்குபிடித்த இந்த விண்கலமும் பூமியில் விழுந்து வெடித்து சிதறியது. ஆனால் இதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அடுத்தக்கட்ட விண்கலனை தயாரிக்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்