இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.1 ஆக பதிவு

செவ்வாய், 22 ஜனவரி 2019 (08:25 IST)
இந்தோனேசியாவில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக  1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுமார் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் இந்தோனேசியாவின் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் குறித்த சேதாரங்கள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்