ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி 92 சதவீதம் வெற்றி! அடுத்த கட்ட சோதனை இந்தியாவில்!

புதன், 11 நவம்பர் 2020 (17:14 IST)
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92 சதவிதம் மக்களை காப்பாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகையே முடுக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷியா ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது.  இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது. இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த தடுப்பூசியின் மூலம் 92 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என ரஷ்ய சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த ஸ்பூட்னிக் வி யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்