ரஷ்ய படையை ஆதரித்து எழுதியவர் குண்டு வீசி கொலை: கொலையாளி ஒரு பெண்ணா?

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (08:07 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதை ஆதரித்து சமூக வலைதளங்களில் எழுதியவர் வெடிகுண்டு வீசி கொலை செய்ததை அடுத்து இந்த கொலையை ஒரு பெண் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ரஷ்யாவை சேர்ந்த ராணுவலைப்பதிவு எழுத்தாளர் டாடர்ஸ்கை என்பவர் நேற்று ரஷ்யாவில் உள்ள ஒரு ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் மார்பளவு சிலையை டாடர்ஸ்கை அவர்களுக்கு  பரிசாக கொடுத்தார்.
 
அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் டாடர்ஸ்கை சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் மேலும் 30 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் ஒரு பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் இந்த குண்டுவெடிப்புக்கு வேறு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
உக்ரைன் போர் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் உக்ரைன் சதியும்  இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் உக்ரைன் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்