ரஷியா: கிளர்ச்சியில் ஈடுபடுவோரை கண்டதும் சுட்டுத் தள்ள அதிபர் புதின் உத்தரவு!

சனி, 24 ஜூன் 2023 (15:17 IST)
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இரு நாடுகளும் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துவராத நிலையில், இருதரப்பிலும், ஆயிரக்கணக்கான போர்வீரர்களும், அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர்.

ரஷியாவுக்கு, மேற்கத்திய நாடுகளும் ஒத்துழைப்புடனும், உதவியுடனும், உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே ரஷியாவில் ராணுவத்தினருக்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வாக்னர் ஆயுதக் குழுவினரை கண்டதும் சுட்டுத் தள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இன்று  நாட்டு மக்களிடம் அதிபர் புதின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  நாட்டின் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க  உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

ரஷிய ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் தேச துரோகிகள்; அவ்ர்களைக் கண்டதும் சுட்டுத் தள்ள உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிபர்  புதினுக்கு ஆதரவாக  செயல்பட்டு வந்த வாகனர் ஆயுதம் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு, ராணுவ அலுவலகத்தைக் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்