உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 6 பேர் பலி

Sinoj

செவ்வாய், 23 ஜனவரி 2024 (17:23 IST)
உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் 2 வது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் மீது ரஷிய நாடு போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அளித்து வரும் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியால், உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளாக இரு நாடுகள் இடையே போர் தொடுத்து வரும் நிலையில்,  இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தப் போரினால் சர்வதேச பொருளாதாரத்திலும் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் 2 வது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில், கீவ் நகரில்  ஒரு நபரும், கார்கீவ் நகரில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது. மேலும், கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்துள்ளதாகவும், இதில், இடிபாடுகளில் சிக்கி பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்