கோயிலில் நிர்வாணமாக தியானம் செய்த நபரை தேடும் போலீஸார்

புதன், 4 அக்டோபர் 2023 (21:15 IST)
இந்தோனேஷியாவுக்கு சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நிர்வாணமாக தியானம் செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தோனேஷியாவுக்கு சுற்றுலாவுக்குச் சென்ற நபர் ஒருவர் அங்குள்ள இந்து கோயிலில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக தியானம் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து பாலியில் உள்ளள இந்து கோயிலிலில் ஆடைகள்  இன்றி நிர்வாணமமாக தியானம் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீடியோவில் உள்ள நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் பற்றி விவாரணையில் குடியுரிமை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலாத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிகம்பேர் வந்து செல்லும் கோயிலில் நிர்வாணமாக தியானம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்