ஒட்டு மொத்த பிரான்சையும் உலுக்கிய பெரும் சத்தம்! – ஏலியன்களின் வேலையா?

புதன், 30 செப்டம்பர் 2020 (16:43 IST)
இன்று பிரான்சின் தலைநகரமான பாரிஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் வெடிப்பு சத்தம் கேட்டதால் மக்கள் பீதியில் உறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெரும் குண்டு வெடித்தார் போல சத்தம் கேட்டுள்ளது. இதனால் பாரிஸில் நடந்த டென்னிஸ் போட்டி முதற்கொண்டு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மக்கள் பீதியில் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் குண்டு வெடித்தது போன்ற எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.

இந்நிலையில் பாரிஸில் கேட்ட அந்த சத்தம் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது. சதிகோட்பாட்டாளர்கள் சிலர் வானில் ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் சென்றதால் ஏற்பட்ட சத்தம்தான் அது என்று கிளப்பி விட அந்த சத்தம் குறித்த வதந்திகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அந்த சத்தம் குறித்து விளக்கம் அளித்துள்ள பிரெஞ்சு போலீஸார் பிரான்ஸின் சூப்பர் சோனிக் விமானம் சென்றதால் ஏற்பட்ட சத்தம் அது என்று விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்