பாகிஸ்தான் விமான விபத்து 66 பேர் பலி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சனி, 23 மே 2020 (07:53 IST)
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 100 பேரில் 66 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நேற்று மாலை பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் சுமார் 99 பேருக்கு மேல் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்றனர். தரையிரங்குதலின் போது திடீரென தீப்பற்றியதாகவும் அதனால் அங்கிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு மீது மோதியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விமானத்தில் 91 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் பயணம் செய்ததனர்.

இந்நிலையில் தற்போது வரை  விமானத்தில் பயணம் செய்தவா்கள், குடியிருப்புவாசிகள் என 66 போ உயிரிழந்தனா். விபத்து நேரிட்டதும் தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். 30 க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்