ஒருநாள் உலக கொரோனா பாதிப்பு: இந்தியா தொடர்ந்து முதலிடம்

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (07:29 IST)
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,507 பேருக்கு கொரோனா உறுதியானது என்பதும் இரண்டாவதாக  பிரேசிலில் 44,684 பேரும் மூன்றாவதாக அமெரிக்காவில் 44,377 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,31,350 என அதிகரித்துள்ளதாகவும், உலகில் இதுவரை  கொரோனாவுக்கு 7,96,287 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,98,297 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து. பெருவில் மிக அதிகமாக நேற்று 8,639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
 
மொத்த கொரோனா பாதிப்பில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,45,308 என்றும், பிரேசிலில் 35,05,097 என்றும், இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 29,04,329 என்றும் தெரிகிறது. மேலும் அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,77,351 என்பதும்,  பிரேசிலில் 112,423 என்பதும்,  இந்தியாவில் 54,975 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்