உகானில் 39 ஆண்டுகளுக்கு முன்னரே கொரோனா: Eyes of Darkness கூறுவது என்ன?

திங்கள், 17 பிப்ரவரி 2020 (18:41 IST)
39 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா பற்றி நாவல் ஒன்றில் கற்பனையாக எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா வைரஸால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டுமே நேற்று மட்டுமே 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சீனாவில் மட்டுமே 1, 756 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 70,400 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைர்ஸ் உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதனை தடுக்கும் முயற்சியை உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகமாகி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
 
இந்நிலயில், கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "The Eyes of Darkness" என்ற நாவலில் கொரோனா போன்ற உயிர்கொல்லியை பற்றி கூறப்பட்டுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாவலில், சீன ராணுவ ஆய்வகத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. 
 
ஊகானில் அமைக்கப்பட்டுள்ள அந்த ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த உயிர்கொல்லி வைரசுக்கு wuhan 400 என்றும் நாவலில் பெயரிடப்பட்டு கதை தொடர்கிறது. 
 
இதேபோலதான் தற்போது கொரோனாவும் ஆபத்தை விளைவித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்