கொரோனாவா அப்படினா... உலக நாடுகளை வியக்க வைக்கும் வட கொரியா!

வியாழன், 8 ஏப்ரல் 2021 (09:33 IST)
தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

 
உலகம் முழுவதும் 133,669,384 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,898,495 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 107,792,356 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,978,533 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 
 
இந்நிலையில், உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது. ஆம், இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்