கணவனுக்கு பெண் பார்க்கும் மூன்று மனைவிகள் – எஸ் என்ற எழுத்தில்தான் பெண் வேண்டுமாம்!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (14:56 IST)
பாகிஸ்தானைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு அவரது மூன்று மனைவிகள் சேர்ந்து நான்காவது திருமணத்துக்காக பெண் பார்த்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்தவர் அட்னான். இவருக்கு தற்போது 20 வயதாகும் நிலையில் 3 மனைவிகள் உள்ளனர். முதல் திருமனம் 16 வயதில் அவர் பள்ளியில் படிக்கும் போதே நடந்துள்ளது. அதையடுத்து 3 ஆண்டுகழித்து ஒரு திருமணமும் கடந்த ஆண்டு ஒரு திருமனமும் நடந்துள்ள நிலையில் இப்போது நான்காவதாக ஒரு திருமனம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு அவரின் மூன்று மனைவிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அவர்களே அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மூன்று மனைவிகளின் முதல் எழுத்தும் எஸ் ஸில் ஆரம்பிப்பதால் நான்காவது மனைவிக்கும் அதே போல பேர் வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்திருக்கிறார் அட்னான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்