நாப்கினுக்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்ளும் பெண்கள்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (16:31 IST)
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள் வறுமையின் காரணமாக சானிட்டரி நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு வைத்துக்கொள்கின்றனராம். 
 
கென்யாவில் உள்ள கிராமங்களில் நாப்கின் எளிதாக கிடைப்பதில்லை. அதோடு அதை வாங்க மேற்கொள்ளும் பயணத்திற்கும் பணமில்லை, போக்குவரத்தும் இல்லை. எனவே, கிராமத்தில் இருந்து வெளியே போகும் டிரைவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டு, அவர்களை நாப்கின் வாங்கி வரும் படி கூறுகின்றனர். 
 
இந்நிலையில், இதற்கு முடிவு கொண்டுவர கென்யா அரசும், யுனிசெப்பும் சேர்ந்து இந்த பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்