பேபி பவுடர் விற்பனை நிறுத்துகிறது ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் – பின்னணி என்ன?

புதன், 20 மே 2020 (08:18 IST)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துகிறது அந்நிறுவனம்.

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் உலகம் முழுவதும் குழந்தைகளை பராமரிப்பதற்கான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் இந்த நிறுவன பொருட்களை பயன்படுத்தியதால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பொருட்களை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக அமெரிக்காவில் மட்டும் 16,000 பேர் அந்நிறுவனத்தின் மேல் வழக்கு தொடுத்துள்ளனர். இதையடுத்து பலநூறு கோடி டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இப்போது தங்களது பொருட்களை விநியோகம் செய்வதை கனடா மற்றும் அமெரிக்காவில் நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்