இம்ரான்கான் சிறையில் வேலை செய்ய வேண்டும்: சிறை அதிகாரிகள் உத்தரவு..!

Siva

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (06:46 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வேலை செய்ய வேண்டும் என சிறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவற்றில் சில வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான நான்கு வழக்குகளில் 34 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி புஷ்ரா பீவி என்பவர் இம்ரான் கான் இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் இம்ரான் கான் உடன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இம்ரான் கான் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகிய இருவருக்கும் உயர்மட்ட சிறை இதுவரை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இருவரும் சிறையில் சாதாரண கைதிகளை போல் வேலை பார்க்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் என்ன விதமான வேலை பார்க்க வேண்டும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்