பொதுவெளியில் தோன்றினாரா கிம் ஜாங் உன்? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

சனி, 2 மே 2020 (08:44 IST)
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்  இறந்துவிட்டதாக பல செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர் பொதுவெளியில் தோன்றியதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.

ஆனால் இதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை வெளியாகவில்லை.  ஆனால் கிம் ஜான் கடந்த சில வாரங்களாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வில்லை என்பதால் சந்தேகங்களும் எழுந்த்ள்ளன. இந்நிலையில் வடகொரியாவின் அண்டைநாடான ஜப்பான் கிம்மின் உடல்நிலை குறித்து ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் ‘ கடந்த மாதம் கிராமப்புறம் ஒன்றிற்கு சென்ற கிம்முக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஸ்டண்ட் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவரின் கை நடுக்கத்தால் அறுவை சிகிச்சையில் குழப்பம் ஏற்பட்டு கிம்மின் உடல்நிலை மோசமடைந்தது. தற்போது அவர் கோமா நிலையில் இருக்கலாம்'  எனத் தெரிவித்துள்ளது. ஆனால் ஜப்பான் நாளேட்டின் இந்த செய்திக்கும் எந்தவொரு ஆதாரமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து அந்நாட்டு அரசு ஊடகங்களும் எந்தவொரு செய்தியும் வெளியிடாததால் மேலும் குழப்பம் உருவானது. இதையடுத்து இப்போது மூன்று வாரங்களுக்கு வடகொரியாவில் புதிதாக திறக்கப்பட்ட உரத்தயாரிப்பு ஆலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்