சிங்கப்பூரில் எதிர்க்கட்சி தலைவரான இந்திய வம்சாவளி வழக்கறிஞர்!

புதன், 29 ஜூலை 2020 (08:11 IST)
சிங்கப்பூரில் எதிர்க்கட்சி தலைவரான இந்திய வம்சாவளி வழக்கறிஞர்!
சிங்கப்பூரில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற்று வந்த தேர்தலில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பி.ஏ.பி என்ற கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சி 83 தொகுதிகளில் வெற்றி பெற்று அபாரமாக மீண்டும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிங்கப்பூரில் முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் நேற்று நடைபெற்றது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரீத்தர் சிங் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்
 
சிங்கப்பூர் அரசியல் அமைப்பு சட்டப்படி எதிர்க்கட்சிகளை நியமனம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் அரசியல் அமைப்பின்படி எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்த நிலைப்பாடு எதுவுமில்லை. ஆனால் சமீபத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் தான் தற்போது பிரீதம்சிங் என்ற இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இவரது கட்சி பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட்டு 10 தொகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு பெருமையானதாக கருதப்படுகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்