உலகை ஆளும் இந்திய வம்சாவளியினர்! – அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட பட்டியல்!

புதன், 17 பிப்ரவரி 2021 (10:30 IST)
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க தேர்தலில் துணை ஜனாதிபதியாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றது இந்தியாவில் பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து அதிபர் ஜோ பிடனின் மருத்துவ ஆலோசனை குழுவில் ஷெரின் கவுண்டர் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இந்தியாஸ்பரோ என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உயர்பதவிகளில் உள்ள இந்தியர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 15 நாடுகளில் 200 பேர் அரசின் உயர்பதவிகளை வகித்து வருவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்